பலாசூர், டிச.3-

இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அவ்வப்போது பல்வேறு நவீன ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறது.
4 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
இந்த வரிசையில் அக்னி-4 ஏவுகணை ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள பலாசூரில் இருந்து அவ்வப்போது பரீட்சார்த்தமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணையின் சோதனை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி நடத்தப்பட்டது. நேற்று காலை 10.20 மணி அளவில் 4-வது கட்ட பரிசோதனை முயற்சியாக அக்னி-4 ஏவுகணை பலாசூர் அருகேயுள்ள வீலர்ஸ் தீவில் இருந்து நடமாடும் ‘லாஞ்சர்‘ மூலம் செலுத்தப்பட்டது.

4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக கண்டறிந்து தாக்கக் கூடிய இந்த ஏவுகணை நேற்றைய பரிசோதனையின்போதும் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. அக்னி-4 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடியது ஆகும். மேலும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே சரிசெய்து கொண்டு இலக்கை நோக்கி செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. தரை வழியில் இருந்து சென்று தரைவழி இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை 4 ஆயிரம் டிகிரி வெப்ப நிலையையும் தாங்கிக் கொள்ளக் கூடியதாகும். 5-வது தலைமுறை கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் கொண்ட அக்னி-4 ஏவுகணை உலகத்தரம் வாய்ந்த ஏவுகணைகளில் ஒன்று என பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top