மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் 8-ம் தேதி நடக்கிறது. பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததில் இருந்தே, பிரதமர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ராஜபக்சவை சந்தித்த மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். மோடியை விமர்சித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, ‘பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படுவீர்கள்’என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்தார். ‘மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்துவிட்டு வைகோ பாதுகாப்பாக செல்ல முடியாது’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரித்தார். இதனால் பாஜக மதிமுக இடையே மோதல் வெடித்தது. எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த மதிமுகவினர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். தமிழருவி மணியனும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னையில் 8-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு வைகோ முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top