சென்னை, டிச. 2–

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மை இருந்து வந்தது. ஏற்ற இறக்கத்துடன் விற்றது. கடந்த 28–ந்தேதி ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 656 ஆக இருந்தது. 29–ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.19 ஆயிரத்து 352 ஆனது.
தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாறு காணாத ஏற்றம்: ஒரே நாளில் கிராமுக்கு ரூ.84 உயர்ந்தது
அதை தொடர்ந்து, நேற்று காலை அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.376 குறைந்தது. ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 976 ஆக இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நகைப் பிரியர்கள் கடைகளுக்கு சென்று நகைகளை வாங்கினர். விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அந்த எதிர்பார்ப்பு நீடிக்கவில்லை. நேற்று காலையில் ரூ.376 குறைந்திருந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக ரூ.512 அதிகரித்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 488 ஆனது.

புது டெல்லி மார்க்கெட் நிலவரப்படி இன்று காலை மீண்டும் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 768 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று மாலை கிராம் ஒன்றுக்கு 2704 ஆகவும் ஒரு பவுனுக்கு 21,632 ஆகவும் மீண்டும் உயர்ந்தது. 

இவ்வாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஒரேமூச்சாக கிராமுக்கு 84 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top