கட்சிரோலி, டிச. 8-

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து தீக்குளிப்பு மற்றும் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்த முயன்ற 135 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் போராட்டத்தின்போது தீக்குளிக்க முயன்ற 135 பேர் கைது
வனப்பகுதியில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஷ்டிரிய ஜன்ஹிதாவதி யுவ சமிதி, அகேரி ஜில்லா நிர்மன் கீர்த்தி சமிதி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 4-ம்தேதி முதல் கட்சிரோலி கலெக்டர் அலுவலகம் மற்றும் இந்திரா சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தீக்குளிப்பு மற்றும் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்துவதாக எச்சரித்திருந்தனர். அதன்படி, மண்எண்ணெய் கேன்கள் மற்றும் கயிறுகளை சேகரித்துக்கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட 135 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை மோசமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top