இளம் ரசிக, ரசிகைகளின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை திருவிழா வரும் பொங்கலன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரிலுள்ள பெல்பின்ஸ் திடலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 
நெல்லை சந்திப்பில் யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்
சிங்கப்பூர், மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடக்க இருக்கும் இந்த நிகழ்விற்கு ‘யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கிரீன் திரீஸ் சொலியுஷன்ஸ் மற்றும் ஜெனி இன்போடெயின்மென்ட் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்ச்சியின் பர்ஸ்ட் லுக் நேற்று சமுக வலைதளங்களில் வெளியிட்டு பேசிய யுவன் கூறுகையில் ‘எங்கோ சென்று இசையமைப்பதைக்காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணி நான்தான் நெல்லையை தேர்ந்து எடுத்தேன். எனது முதல் படமான ‘அரவிந்தன்’ இங்குதான் படமாக்கப்பட்டது. ஆதலால் இம்முடிவு "என்று கூறினார். 

இந்த இசை நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் அமையபோவது இசைஞானி இளையராஜாவின் வருகை. பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், செந்தில்தாஸ், வாசு, சத்யன், பெல்லிராஜ், ஸ்வேதா பண்டிட், ப்ரியா ஹிமேஷ், பிரியதர்ஷினி, ரம்யா ஆகியோரும் பங்கு பெற உள்ளனர். 

இந்நிகழ்ச்சி ஜனவரி 17 ஆம் நாள் பாளையங்கோட்டையிலுள்ள பெல்பின்ஸ் திடலில் நடைபெற உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பொங்கல் பரிசாக அமையவுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top