லக்னோ, டிச.8-

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மகாலை வக்பு வாரியத்திடம் (இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை நிர்வகிக்கும் அமைப்பு) ஒப்படைக்க வேண்டும். அதனை வக்புக்கு உள்பட்ட சொத்தாக அறிவிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில மந்திரியும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம் கான் கருத்து வெளியிட்டிருந்தார்.தொல்லியல் துறைக்கு சொந்தமான தாஜ் மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது: பா.ஜ.க.

இதற்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்த உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவரான லட்சுமிகாந்த் பாஜ்பாய், ‘ராஜா ஜெய்சிங் என்பவரிடம் இருந்து தேஜோ மஹாலயா கோயிலின் நிலத்தின் ஒரு பகுதியை தாஜ் மகாலை கட்டுவதற்காக மொகலாய மன்னர் ஷாஜஹான் விலைக்கு வாங்கினார். அதற்கான ஆவண ஆதாரம் எங்களிடம் உள்ளது. 

இந்த சொத்தினை (தாஜ் மகால்) 1920-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டது. தற்போது, இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமாகி விட்ட தாஜ் மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க இயலாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top