காத்மண்டு, டிச. 8-

நேபாள நாட்டில் 67 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். தலைநகர் காத்மண்டுவில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பொக்கரகடா கிராமம் அருகே நேற்றிரவு 38 இருக்கைகளை கொண்ட அந்த பேருந்து 67 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென 2000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 
நேபாளத்தில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி
இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியானார்கள். அவர்களது சடலங்களை மீட்பு படையினர் மீட்டதுடன், காயமடைந்த மேலும் பலரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி கேஷ் மகதூர் சாஸ்திரி கூறினார். 

நேபாளத்தில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் மோசமாக இருப்பதாலும், வாகனங்களை சரியாக பராமரிக்காததாலும் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top