புதுடெல்லி, டிச.9- 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி புகாருக்கு எதிரான முறையீடு தள்ளுபடி

இதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோரிடம் அளித்த மனுவில், ‘ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்குவதற்காக ரூ.1,000 கோடி பேரம் முடிவாகி ரூ.200 கோடி ஏற்கனவே கை மாறியுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்து இருப்பதாக’ குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வாய்மொழியாக முறையீடு செய்தார். டிராபிக் ராமசாமி போன்றோரின் இந்த நடவடிக்கை கோர்ட்டுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி இது குறித்து முறையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதற்கு தலைமை நீதிபதி ‘‘1,000 கோடி ரூபாய் குற்றச்சாட்டுத்தானே? அதனை கோர்ட்டு பார்த்துக் கொள்ளும். நீங்கள் இதுபற்றி கவலைப்படவேண்டாம்.’’ என்று கூறி இந்த முறையீட்டை தள்ளுபடி செய்தார். 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top