மும்பை, டிச. 8-

நாட்டில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் உயர்வை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
8 வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் கடும் சரிவு: சென்செக்ஸ் 338 புள்ளிகள் சரிந்தது
எட்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 1 சதவிகித அளவுக்கு சரிவடைந்தன. இன்றைய பங்குசந்தை வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 338.70 புள்ளிகள் குறைந்தும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 100.05 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டது.

பங்குச்சந்தைகள் சரிவடைய துவங்கியது முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை விற்று லாபத்தை ஈட்ட ஆரம்பித்தனர். இதனால், அதிகபட்சமாக இன்போசிஸ் பங்குகளின் விலை 4.84 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தன. அதற்கடுத்த நிலையில் சீசா ஸ்டெர்லைட், எம் அண்டு எம், பி.பி.சி.எல் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

அதே சமயம் ஐ.டி.சி., கோல் இந்தியா, ஏர்டெல், சிப்லா, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top