சென்னை, டிச.9- 

தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேறின.

தமிழக சட்டசபையில் கடந்த 4, 5 மற்றும் 8-ந் தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு அளிப்பது குறித்த சட்ட மசோதா, தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்ட மசோதா, உள்ளாட்சி நிதித் தணிக்கை சட்ட மசோதா, அண்ணாமலை பல்கலைக்கழக (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்ட மசோதா மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேறியது

சட்டசபையில் இவை நிறைவேற்றப்படுவதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா நிறைவேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்த மசோதா நிறைவேறினால், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு லாபமும், மக்களுக்கு சர்க்கரை விலையினால் சுமை வந்து சேரும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் சர்க்கரையில் விலை மாற்றம் இருக்காது என்று உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த சட்ட மசோதா நிறைவேறியது. 

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் தொடர்பான அரசினர் தீர்மானத்தை, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாருல்லா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய அரசின் இந்த சட்டத்தால், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். 

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்கும் வாய்ப்பு இந்த சட்டத்தில் இல்லை என்று ஜவாருல்லா குறிப்பிட்டார். ஆனாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது. அந்த வகையில் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நேற்று 7 சட்ட மசோதாக்கள் நிறைவேறின

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top