மாலி, டிச.9- 

மாலத்தீவு தலைநகர் மாலியில் கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட பெரும் தீ விபத்தால், தொழிற்சாலை முழுவதும் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மக்கள் குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா 1,000 டன் குடிநீரை ஏற்கனவே அனுப்பியுள்ளது. மாலத்தீவில் சேதமடைந்த குடிநீர் ஆலை சீரமைப்புக்கு சீனா ரூ.3 கோடி நிதியுதவி

சேதமடைந்த இந்த தொழிற்சாலையை சீரமைக்க சுமார் ரூ.120 கோடி செலவாகும் என மாலத்தீவு அரசு அறிவித்து உள்ளது. இதற்கு உதவுமாறு சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் மாலத்தீவு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

மேலும் தனியார் மூலமும் நிதியுதவி பெற முயற்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தொழிற்சாலையை சீரமைக்க 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3 கோடி) வழங்குவதாக சீனா அறிவித்து உள்ளது. மேலும் அங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக விமானத்தில் குடிநீர் சப்ளையும் செய்து வருகிறது. இதில் முதற்கட்டமாக 15 டன் குடிநீர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளது. 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top