புவனேஸ்வர், டிச. 8- 

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தயாராகி வருகிறது. 
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்த இந்தியா ஆயத்தம்
உலகின் முன்னணி 8 அணிகள் பங்கேற்றுள்ள 35-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினாவுடன் விளையாடிய லீக் போட்டிகளில் தோல்வியடைந்தது. நாளை இரவு நடைபெறும் ஆட்டத்தில், உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். 

இதுகுறித்து அணியின் அனுபவ வீரரான ரகுநாத் கூறுகையில், “நேற்றைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள இன்று பயிற்சி செய்தோம். முந்தைய போட்டிகளைவிட நாளைய போட்டியில் சிறப்பாக ஆட முடியும். காலிறுதி போன்று விளையாடுவதற்கு, மனதளவில் இந்த போட்டிக்காக தயாராகியிருக்கிறோம்” என்றார். 

இளம் தடுப்பாட்ட வீரர் ஆகாஷ்தீப் சிங்கும் இதே கருத்தை கூறினார். நேற்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு வீரரும் நன்றாக ஆடியபோதும் சில கோல்களை தவறவிட்டதாகவும், இறுதிக்கட்ட ஆட்டத்திற்காக கூடுதல் பயிற்சி செய்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top