கொழும்பு, டிச.8-

இலங்கையின் அதிபர் பதவிக்காக கடந்த 2005 மற்றும் 2010-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போதாது என்று கருதி அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, தொடர்ந்து மூன்றாவது முறையும் இலங்கையின் அதிபராகும் ஆசையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து மொத்தம் 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்த 18 பேர் போட்டி
இவர்களில் முக்கிய நபராக ராஜபக்சே அரசில் மந்திரியாக பதவி வகித்து, வெளியேற்றப்பட்ட மைத்ரிபாலா சிறிசேனா எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். அங்குள்ள பிரதான புத்த மதத் துறவிகள் பலர் இந்த தேர்தலில் இவருக்குதான் வாக்களிக்க வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில், 'புத்த மதத்தவரிடையே பெருத்த செல்வாக்கு மிக்கவர்' என்று கருதப்பட்ட ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

இந்த செல்வாக்கு மேலும் சரிவதற்குள் அடுத்த அதிபர் தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று திட்டமிட்ட ராஜபக்சே, தற்போதைய அதிபருக்கான பதவிக் காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் மிச்சம் உள்ள நிலையில் அடுத்த பொதுத் தேர்தலை அவசரமாக அறிவித்தார்.

இந்நிலையில், ராஜபக்சேவை எதிர்த்து மைத்ரிபாலா சிறிசேனாவுடன் சேர்த்து மொத்தம் 18 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். ஒரு புத்த மதத் துறவி, தமிழினத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரும் களத்தில் உள்ளனர்.

இவர்களில் யார் அடுத்த அதிபர் ஆவது? என்பதை வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது சுமார் ஒரு கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top