ஒரு நாளில் நான்கு முறை தியானம் செய்ய முயலுக. பிரம்ம முகூர்த்தம், நண்பகல், மாலை சந்தியா வேளை மற்றும் நடுஇரவு ஆகிய நான்கு நேரங்களில் தியானம் செய்ய வேண்டம் என்று சுவாமி பிரம்மானந்தர் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 
தினமும் இருமுறை தியானம் மனஅழுத்தத்தை போக்கும்
இந்த நேரங்களில் இயற்கை அமைதியாய் இருக்கிறது. நமக்கு உள்ளும் புறமும் ஆன்மீக அலைகளில் ஓட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த நான்கு நேரங்களிலும் தியானம் செய்ய இயலாதவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலாவது தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் இருவேளை தியானம் செய்து வந்தால் புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தம் வராது. 

காலை வேளை தியானத்திற்கு சிறந்த நேரம். இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வறு மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும். 

எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகைறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது. 

தியானித்த விஷயத்தை அமைதியாக சிந்தித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது மனம் ஆன்மீகச் சிந்தனைகளால் நிரப்பப்படும். அப்போது மனம் ஆனந்தமாக இருக்கும். இந்த ஆனந்தம் மனத்தின் அடித்தளத்திலிருந்து வருகிறது. 

இதற்கு பெயர் தான் பஜானானந்தம். இந்த அக ஆனந்தத்தையும், அமைதியையும் ஆழப்படுத்தவும்; உறுதிப்படுத்தவும். தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தேவைக்கு அதிகமான உணவை ஒரு போதும் வயிற்றில் திணிக்க கூடாது. 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top