ஸ்ரீநகர், டிச.8-

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து சம்பா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்தார்.துப்பாக்கி விசையை அழுத்தும் விரலை விட வாக்களிக்கும் பொத்தானை அழுத்தும் விரலே வலிமையானது: மோடி

அப்போது அவர் பேசியதாவது:-

காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றம் செய்வது என்பது ஒரு தேசிய கடமையாகும். நீங்கள் தந்தை-மகனின் ஆட்சியையும், தந்தை-மகளின் ஆட்சியையும் பார்த்து வந்திருக்கிறீர்கள். இவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளார்களா?

இங்குள்ள இளைஞர்கள் முன்னேற வேண்டும். உரிய வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி அமைய வேண்டும். அது பா.ஜ.க. ஆட்சியாக இருக்க வேண்டும். துப்பாக்கி விசையை அழுத்தும் விரலை விட வாக்களிக்கும் பொத்தானை அழுத்தும் விரலே வலிமையானது. 

தவறாக வழி நடத்தப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் தற்போது 'ஏ.கே.47' துப்பாக்கிகளை பாரமாக உணர தொடங்கிவிட்டனர். கைபேசிகளுக்கான நவீன வகை நடைமேடையான ‘ஆண்ட்ராய்ட்’டுக்கு அவர்கள் ஏங்க ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top