புதுடெல்லி, டிச. 8-

2015 உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மூத்த வீரர்களான சேவக், காம்பீர், யுவராஜ், ஹர்பஜன் மற்றும் ஜாகிர்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
இந்திய அணியில் இடம் கிடைக்காதபோதும் ரஞ்சி போட்டியில் சதமடித்து அசத்திய காம்பீர்
உலக கோப்பை போட்டிக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற போதிலும், அது தனக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதை மெய்பிக்கும் விதமாக ரஞ்சி போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் டெல்லி அணி கேப்டன் காம்பீர். 

சௌராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் 147 ரன்களை குவித்து காம்பீர் அசத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதும், பொறுப்புடன் விளையாடிய காம்பீர், ரஜத் பாட்டியாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் தனது 38வது முதல் தர சதத்தை பூர்த்தி செய்து காம்பீர் சாதனை படைத்தார். 

நேற்று ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை எடுத்திருந்த டெல்லி அணி இன்று மீண்டும் தனது ஆட்டத்தை தொடர்ந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 123 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்திலிருந்த காம்பீர் 147 ரன்கள் குவித்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதன் பின் அந்த அணி வீரர்களான அவானா, நர்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடியதுடன் தங்கள் பங்குக்கு 61 மற்றும் 65 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோர் 442 ஆக உயரச்செய்தனர். 

பின்னர் சௌராஷ்டிரா தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. 10 ஓவர் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை குவித்துள்ளது. இப்போட்டியின் போது பவுன்சர் பந்து வீச்சில் உயிரிழந்த ஹியூக்ஸ் மற்றும் ராமன் லம்பா ஆகியோரை நினைவுபடுத்தும் விதமாக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் மரக்கன்றுகளை காம்பீர் நட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top