வியர்வை நாற்றத்தைப் போக்கி எப்போதும் வாசனையாக இருக்க சில எளிய குறிப்புகள்...தலையை சரிவர பராமரிக்காமல் போனால், தலையில் வியர்த்துக் கொட்டி, வியர்க்குருவும் அரிப்பும் ஏற்பட்டு, சிக்கும் பிசுக்கும் சேர்ந்து தலையே குப்பைக் கூடையாக மாறி நாறத் தொடங்கும். 
வியர்வை நாற்றம் போக்கும் குளியல் பவுடர்
* சீயக்காய் பொடி-2 டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன் இரண்டையும் வெந்நீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்துக் குளியுங்கள். ஓரிரு வாரத்தில் அழுக்கும் வியர்வை நாற்றமும் போய் தலை சுத்தமாகிவிடும். 

* பெண்களுக்கு, மாதவிலக்கின் போதுதான் கை,கால், அக்குள், தொடை பகுதிகளில் வியர்வை நாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு, 

சம்பங்கிவிதை - கால் கிலோ, 
மகிழம்பூ, பூலான் கிழங்கு, 
பயத்தம்பருப்பு- தலா 100 கிராம் 

எடுத்து எல்லாவற்றையும் சேர்த்து அரையுங்கள். வெளியில் செல்லும் போதும், அலைந்துவிட்டு வீடு திரும்பும்போதும் இந்தப் பவுடரால் தேய்த்துக் கழுவுங்கள். இதனால், உடம்பில் ஏற்படும் கெட்ட வாடை, வியர்க்குரு, சொரி அத்தனையும் அடியோடு நீங்கி, உடம்பு கமகமவென்று மணக்கும். 

* வியர்வையால் ஏற்படும் பாதிப்புகளை போக்கி உங்களை கமகமவென்று மாற்ற சூப்பரான வாசனை குளியல் பவுடர் ஒன்று இருக்கிறது. இதை நீங்களே எளிதாக தயார் செய்யலாம். 

செண்பகப்பூ, மகிழம்பூ, ரோஜா மொட்டு- தலா 50 கிராம், 
பொன் ஆவாரம்பூ, தவனம் - தலா 100 கிராம் ( உலர்ந்த பூக்களாக வாங்கிக் கொள்ளுங்கள்), 
வெட்டிவேர், சந்தனம்- தலா 20 கிராம், 
பூலான் கிழங்கு, வெள்ளரி விதை, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், 
முல்தானிமெட்டி - 10 கிராம், 
பயத்தம்பருப்பு - கால் கிலோ, 

இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை தலைக்கும், தினமும் உடம்பு முழுவதும் இதைப் பூசி குளித்து வந்தால் சூப்பர் வாசனையுடன் உடம்பே பொன்னிறமாக மின்னும். வியர்வை நாற்றம் உள்ளவர்கள், வெங்காயம் அதிகம் சேர்க்காதீர்கள். சென்ட், டியோடரென்ட், க்ரீம்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.'

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top