புதுச்சேரி, டிச.2–
புதுவை அரசு நிறுவனமான பாண்லே கடந்த 27–ந் தேதி பால் விலையை உயர்த்தியது.புதுவையில் பால் விலை உயர்ந்ததால் ஒரு டீ 10 ரூபாய் ஆனது
ஒரு லிட்டர் பால் ரூ. 10 உயர்ந்தது. பால் விலை உயர்வால் காபி, டீ விலையும் தற்போது உயர்ந்துள்ளது.
இந்தியன் காபி ஹவுசில் ரூ. 15–க்கு விற்கப்பட்ட காபி ரூ. 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் காபி பார்களில் ரூ. 17–க்கு விற்று வந்த காபி ரூ. 20–க்கும், ரூ. 8–க்கு விற்கப்பட்ட டீ ரூ. 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் டீ விலை ஒரு ரூபாய், காபி விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு பால் விலை உயர்வு பால் பொருட்களின் விலையையும் உயரச்செய்துள்ளது. நெய், பன்னீர், தயிர், பால்கோவா, மில்க்சுவீட்ஸ், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பாண்லே நிறுவனமும் பால் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top