பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் சயீத் அஜ்மல் முதலிடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அஜ்மல் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர்
சந்தேகத்துக்குரிய முறையில் பந்துவீச்சு: மறுபரிசோதனைக்கு சயீத் அஜ்மல் தயார்-பாக்.கிரிக்கெட் வாரியம்
இதையடுத்து அவரை சோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர் விதிமுறைகளை மீறி பந்துவீசுவது கண்டுபிடித்தனர். கையை 15 டிகிரிக்கு தான் வளைத்து பந்துவீச வேண்டும். ஆனால் அவர் 40 டிகிரிக்கு மேல் கையை வளைத்து பந்து வீசினார். இதனால் அவருக்கு ஐ.சி.சி. தடை விதித்தது.
இதையடுத்து அவரது பந்துவீச்சை சரி செய்ய முடிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் மூலம் அப்பணியை செய்தது. அவர் அஜ்மலின் பந்து வீச்சு முறையை மாற்றி அமைத்தார். இப்பணி கடந்த 3 மாதமாக நடந்தது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நடத்தும் மறுபரிசோதனைக்கு அஜ்மல் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி.க்கு இ–மெயில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மறுபரிசோதனை தேதிக்காக காத்திருப்பதாகவும் பாக்.கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top