புதுடெல்லி, டிச. 1-

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்காக இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி இன்று புறப்பட்டுச் சென்றது.
ஹாக்கி டெஸ்ட்: இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது
இந்தியா-ஆஸ்திரேலியா ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதும் 5 டெஸ்ட் ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக கேப்டன் ஹர்ஜீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று டெல்லியில் இருந்து பிரிஸ்பேன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜூனியர் ஆசிய கோப்பை போட்டிக்கான பயிற்சியாக இந்த தொடர் அமைந்துள்ளதால், இதில் சிறப்பாக விளையாடி தொடரை வெல்வோம் என்று கேப்டன் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிராளிகளுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதாக கூறிய பயிற்சியாளர் ஹரேந்திர சிங், இந்த அணியில் இருந்து விரைவில் ஓரிரு வீரர்கள் சீனியர் அணிக்கு செல்வார்கள் என்றும் சூசகமாக தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top