மகேஷ்பாபு தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடித்த பல படங்கள் வசூலை குவித்துள்ளன. மகேஷ்பாபு படங்களை ‘ரீமேக்’ செய்து நடிப்பதில் விஜய்க்கும் ஆர்வம் உண்டு. சமீபத்தில் விஜய் நடித்து வெற்றி பெற்ற ‘கத்தி’ படம் தெலுங்கில் ‘ரீமேக்’ ஆக உள்ளது. இந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின. 
விஜய் சிறந்த நடிகர்: மகேஷ்பாபு பாராட்டு
இது குறித்து மகேஷ்பாபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– 

நான் கத்தி படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் விஜய் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர் திறமையான நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எனவே கத்தி படம் ‘ரீமேக்’கில் நடிக்கவில்லை. 

பொதுவாக படங்களை ரீமேக் செய்யும் போது, ஏற்கனவே அந்த படத்தில் நடித்திருந்த நடிகரை போல் முழுமையான நடிப்பை நம்மால் வெளிப்படுத்த முடியாது. எனவே ‘ரீமேக்’ படத்தில் நடிப்பதற்கு நான் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. கத்தி படம் ரீமேக்கில் நான் நடிக்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி எந்த முடிவும் எடுக்க வில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top