கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த செலவுக் கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு விவரங்கள் அதில் உள்ளன.
கட்சிகள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்திலேயே அதிகபட்சமாக திமுக ரூ.41.51 கோடி (ரூ.41,51,33,918) செலவு செய்துள் ளது. 2-ம் இடத்தில் உள்ள அதிமுக ரூ.32.19 கோடி செலவு செய்துள்ளது. தேமுதிக ரூ.18.08 கோடி செலவு செய்துள்ளது. மாநிலக் கட்சிகளிலேயே அதிக பட்சமாக சிவசேனா ரூ.81 கோடி செலவு செய்துள்ளது.
பாமக புதிய வடிவில் கணக்கை தாக்கல் செய்யாமல், பழைய வடிவிலேயே தாக்கல் செய்ததால், முறைப்படி தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ‘மொத்த செலவினம்’ என்ற இடத்தில் தொகையை குறிப்பிடாமல் ‘NIL’ என்று அதிமுகவும், ‘NA’ என்று தேமுதிகவும் தவறு தலாக குறிப்பிட்டுள்ளன. இதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top