சென்னை, டிச.3- 

தமிழக சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.லாசர் வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
பெரியகுளம் சட்டசபை தொகுதியில் மார்க். கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெற்றி செல்லும்: ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.லாசர், 76 ஆயிரத்து 687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்பழகன் 71 ஆயிரத்து 046 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கணபதி 3,422 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர். 

இதையடுத்து, லாசர் வெற்றி பெற்றதை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் கணபதி, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில், தேர்தலின் போது லாசர் பெரும் தொகையை செலவு செய்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்கவில்லை. 

எனவே, லாசரின் வெற்றி செல்லாது என்று அறிவித்து, பெரியகுளம் தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி லாசர் மனு தாக்கல் செய்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.மதிவாணன் ‘மனுதாரர் கூறும் குற்றாச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் கூறப்பட்ட வழிமுறைகள் பின்பற்றி வழக்கும் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். லாசர் வெற்றிபெற்றது செல்லும்’ என்று உத்தரவிட்டார்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top