அடிலெய்டு, டிச.3- 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லாண்ட் நேற்று அளித்த பேட்டியில், ‘முதல் டெஸ்ட் போட்டிக்கு உடனடியாக திரும்புவதால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. இது வீரர்களின் தனிப்பட்ட மனநிலையை பொறுத்த விஷயமாகும். எந்த வீரராவது அசவுகரியமாகவோ, நல்ல மனநிலையில் இல்லை என்று உணர்ந்தாலோ? அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். அதன் பிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். 
முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி இல்லை-அதிகாரி பேட்டி
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸ் கூறுகையில், ‘யூக்சின் இழப்பை சந்தித்துள்ள இது போன்ற சூழலில் அடிலெய்டு டெஸ்டில் பந்து வீசுவது ரொம்ப கடினமாக இருக்கும். சில வீரர்களுக்கும் இது கடினமாகத்தான் இருக்கும். எங்களது எண்ணம் முழுவதும் தற்போது யூக்சுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதில் தான் இருக்கிறது. அது முடிந்து அடிலெய்டு மைதானத்துக்கு வரும் போது, நாங்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதை பார்ப்போம்’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top