சென்னை, டிச. 2–
திருவள்ளுர் தினத்தை தேசிய விழாவாக வட மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருக்குறளையும் வட மாநில பள்ளிகளில் பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் திருவிழாவை 3 மாதம் கொண்டாடுங்கள்: வெங்கய்யா நாயுடு பேச்சு
இந்த நிலையில் வாரந்தோறும் நடக்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு, பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி திருவள்ளுவர் பிறந்த தினத்தை அனைத்து எம்.பி.க்களும் தங்கள் பகுதிகளில் ஜனவரி 15–ந்தேதி முதல் மார்ச் மாதம் 20–ந்தேதி வரை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
இது பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ‘‘மாலைமலர்’’ நிருபரிடம் கூறியதாவது:–
எம்.பி.க்கள் கூட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை.
தேசிய விழாவாக திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில் தமிழ்நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் திருக்குறள் திருவிழாவாக கிராம பஞ்சாயத்து முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் கொண்டாட வேண்டும்.
வடமாநில மக்கள் திருக்குறளை அறிந்து கொள்ளும் போது, நமக்கு கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் அனைவரும் திருக்குறளை அறிய செய்ய வேண்டும்.
திருவள்ளுவர் விழா ஜனவரி 15–ந்தேதி முதல் மார்ச் 20–ந்தேதி வரை 3 மாதங்கள் கொண்டாடும்படி வெங்கய்யா நாயுடு கூறியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top