தொடர்ந்து பொறுப்பற்ற கருத்துகளையும், கண்டனத்துக்குரிய அறிவிப்புகளையும் வெளியிடும் பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜாவையும், சுப்பிரமணியன் சுவாமியையும் பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என வைகோ தெரிவித்துள்ளார்.மதிமுக பொதுச் செயலர் வைகோ
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "எனக்கு மிரட்டல்கள் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் ஹெச்.ராஜா அரசியல் நாகரீகத்தை ஹெச்.ராஜா தாழ்த்திவிட்டார்" என்றார்.
மேலும், "என் அரசியல் வாழ்வில் பலரையும் நான் விமர்சித்திருக்கிறேன். ஆனால், அதற்கு எதிர்வினையாக யாரும் இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து பதிலளித்ததில்லை.
இருப்பினும், ஹெச்.ராஜாவின் விமர்சனங்களுக்கு மற்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹெச்.ராஜா பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாததால், எனது கட்சியினரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். போராட்டங்கள்கூட நடத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தியிருக்கிறேன்.
பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப்போவதாகவும், மதிமுக மீதும் என் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறுவது அபத்தமானவை.
தொடர்ந்து கண்டனத்துக்குரிய வாக்குமூலங்களையும், அறிவிப்புகளையும் வெளியிடும் பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜாவையும், சுப்பிரமணியன் சுவாமியையும் பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றார் வைகோ.
தொடர்புடையவை

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top