சண்டிகரில் நகைக்கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.நடப்பு ஆண்டில் ஒரேநாளில் அதிகபட்ச உயர்வாக டெல்லியில் இன்று தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.840 அதிகரித்தது.

ஒரு மாதத்திற்கு பிறகு 10 கிராம் தங்கம் விலை மீண்டும் ரூ.27,000-ஆக அதிகரித்துள்ளது.

திருமண சீசன் என்பதாலும், நகை வியாபாரிகளின் தேவை அதிகமானதாலும் விலை அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களாக தங்கம் விலை ரூ.730 குறைந்தது. 

இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து இன்று ரூ.840 அதிகரித்தது. 

தொழிற்துறை தேவைகளால் வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.2,700 அதிகரித்து ரூ.37,000-ஆக விற்று வருகிறது. 

டெல்லியில் 99.9% சுத்தத் தங்கம் 10 கிராம் விலை ரூ.27,040 ஆகவும், 99.5% சுத்தத் தங்கம் 10 கிராம் விலை ரூ.26,840 ஆகவும் உள்ளது. 

ஒரு பவுன் விலை ரூ.100 அதிகரித்து ரூ.23,700 ஆக விற்கப்பட்டு வருகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top