சென்னை, டிச. 2–
பாரிமுனை என்.எஸ்.சி போஸ் ரோட்டில் நகை கடை நடத்தி வருபவர் சீரஜ். இங்கு ராஜஸ்தானை சேர்ந்த லெக்மன் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் லெக்மனின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த நகை கடை உரிமையாளர் அவரை கண்காணித்தார். மேலும் கடையில் இருந்த நகைகளை சரிபார்த்த போது 2 கிலோ நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது.வேலை பார்த்த நகை கடையில் திருடி பைனான்ஸ் அதிபரான தொழிலாளி
கண்காணிப்பு கேமராவில் லெக்மன் நகைகளை திருடுவது பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சீரஜ் வட சென்னை இணை கமிஷனர் ஸ்ரீதரிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்கள் ஸ்டாலின், அரசு, சப்–இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டி ஆகியோர் தொழிலாளி லெக்மனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது கொள்ளையடித்த நகையில் அவர் தனியாக பைனாஸ் கம்பெனி ஆரம்பித்து இருப்பதும், கார், பைக் வாங்கி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
ரூ. 20 லட்சம் வரை பைனாஸ் விட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 800 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. லெக்மனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களாக என்று விசாரணை நடந்து வருகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top