நாளை மாக்ஸ்வில்லில் நடைபெறும் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், பிலிப் ஹியூஸ் சவப்பெட்டியை சுமக்கும் 8 நபர்களில் ஒருவராகச் செயலாற்றுகிறார். 
2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மைதானத்திலிருந்து பெவிலியன் வரும் கிளார்க்-பிலிப் ஹியூஸ். | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
மேலும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிலிப் ஹியூஸின் நெருங்கிய நண்பரான மைக்கேல் கிளார்க் உரையாற்றுகிறார்.

பிலிப் ஹியூஸின் சவப்பெட்டியச் சுமக்கும் 8 நபர்களில் ஒருவராக மைக்கேல் கிளார்க் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். ஹியூஸின் தந்தை கிரெக், அவரது சகோதரர் ஜேசன், ஆரோன் பின்ச் உள்ளிட்டோர் சவப்பெட்டி சுமப்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிலிப் ஹியூஸ், மாக்ஸ்வில்லில் அனைவருடனும் நெருங்கிப் பழகியவர் என்பதால் இறுதிச் சடங்கில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஹியூஸ் குடும்பத்தினர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சாலை வழியாக பிலிப் ஹியூஸின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த 40 நிமிடங்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. 

சுமார் 5,000 பேர் பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களில் முன்னாள், இந்நாள் வீரர்கள் அனைவரும், ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். மார்க் டெய்லர், ரிச்சர்ட் ஹேட்லி, லாரா, ஷேன் வார்ன், ஹஸ்ஸி, பிரெட் லீ, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், கிளென் மெக்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top