நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான்: சுருதிஹாசன்
தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் 5 படங்கள் கைவசம் உள்ளன. மற்ற நடிகைகளை விட இவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியும் வருகிறார். இதற்காகவே, அவருக்கு படவாய்ப்புகள் குவிகின்றன. சுருதியை பார்த்து மற்ற நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க ‘கவர்ச்சி’ பார்முலாவை கடைபிடிக்க தொடங்கி விட்டனர். 

‘மேக்கப் போடாமலேயே நான் அழகாகத்தான் இருக்கிறேன்’ என்று சுருதி ஹாசன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, ‘சினிமா நடிகைகள் எல்லோரும் படத்தில் அழகாக தெரிகிறார்கள். அதற்கு காரணம் மேக்கப் போடுவதும், போகஸ் லைட்டும்தான் காரணம். இதுவே திரையில் நடிகைகளை அழகு படுத்தி காட்டுகிறது. 

என்னைப் பொருத்தவரை மேக்கப் போடாமலேயே அழகாக இருக்கிறேன். என் உடல் அமைப்பு இயற்கையாகவே அழகானது. என் பெற்றோர் அழகானவர்கள் என்பதால் நானும் அழகாக இருக்கிறேன்’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top