சங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கியிருக்கும் ‘கப்பல்’ படத்தை எஸ் பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறார் சங்கர். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை பார்த்த சங்கர், கப்பல் படம் சிரிப்பு கலவரமாக அமைந்துள்ளது என்றும், துவக்கம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கப்பல் படத்திற்கு யு சான்றிதழ்
இயக்குனர் சங்கரால் மிகச் சிறந்த படம் என பாராட்டு பெற்ற இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப் பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து மிகவும் பாராட்டியதாக தெரிவித்துள்ளனர். அந்த பாராட்டின் உடனடி பரிசாக படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல நகைச்சுவைக்கு கிடைத்த சான்றிதழ் என்ற மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர்கள் 'கப்பல்' படத்தை இந்த மாதம் 25 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர். 

இந்த வருடத்தின் கடைசியில் வெளிவரும் இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தில் நீங்கா இடம் பெறும் என நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர். கப்பல் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top